சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று 2-வது நாளாக நடந்தது. இதில் வைத்திலிங்கம் பேசுகையில், " மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஜெயலலிதா தீவிரமாக செயல்படுத்தினார். இதை மக்கள் பாராட்டினார்கள். இன்று அந்த திட்டம் இருக்கிறதா நடைமுறை படுத்தப்படுகிறதா என்றே தெரியவில்லை.
மெட்ரோ இரயில் திட்டத்தை கொண்டு வருவதாக சொல்லி கடந்த ஆண்டு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.300 கோடி ஒதுக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 ஆண்டுகளில் ஆய்வு கூட முடிக்கப்படவில்லை. அரசு கேபிள் தொலைக்காட்சி வருமா, வராதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விலைவாசி ஏழை மக்களை அழுத்தி கொண்டுள்ளது" என்றார்.