த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை 2 நா‌ட்க‌ள் தள்ளிவை‌ப்பு : அவை‌த் தலைவ‌ர்!

சனி, 22 மார்ச் 2008 (16:37 IST)
வெ‌ள்ள‌ நிவாரண‌ப் ப‌ணி காரணமாக த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ன் ‌நி‌தி ‌நி‌லை அ‌றி‌க்கை கூ‌ட்ட‌‌த் தொட‌ர் இர‌ண்டு நா‌ட்க‌ள் தள்ளிவை‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெ‌ள்ள ‌நிவார‌ண‌ப் ப‌ணி தொட‌ர்பாக தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற அவசர ஆலோசனை கூ‌ட்ட‌த்‌தி‌ல், த‌மிழக‌த்‌தி‌ல் வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பகு‌திகளை அமை‌ச்ச‌ர்க‌ள், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நே‌‌‌ரி‌ல் செ‌‌ன்று பா‌‌ர்வை‌யி‌ட்டு ‌நிவார‌ண‌ப் ப‌ணிகளை வழ‌ங்க உ‌ள்ளதா‌ல் ச‌ட்ட‌ப் பேரவை நடவடி‌க்கைகளை தள்ளிவை‌க்க கே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, அவை‌த்தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் அனை‌த்து‌க் க‌ட்‌சி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளுட‌ன் ஆலோசனை‌க் கூ‌ட்ட‌ம் நட‌த்‌தி‌னா‌ர். ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியா‌‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், பேரவை ‌வி‌‌தி 26(2) ‌ன் ‌‌கீ‌ழ் 24.3.08, 25.3.08 ஆ‌கிய இர‌ண்டு நா‌ட்க‌ள் நடைபெறுவதாக இரு‌ந்த ச‌ட்டம‌‌ன்ற பேரவை கூ‌ட்ட‌‌‌ம் தள்ளிவை‌க்க‌ப்டு‌கிறது எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்