ஆளுநர் பர்னாலா மருத்துவமனையில் அனுமதி!

செவ்வாய், 18 மார்ச் 2008 (18:00 IST)
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று நண்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

83 வயதான பர்னாலாவுக்கு இன்று பகல் 12 மணிக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதையடுத்து அவ‌ர் சென்னை அ‌ப்ப‌ல்லோ மருத்துவமனை‌‌க்கு கொண்டு செல்லப்பட்டார். ‌‌அ‌ங்கு ‌தீவிர சிகிச்சை பிரிவில் ப‌ர்னாலா அனுமதிக்கப்பட்டுள்னா‌ர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக யு.என்.ஐ. கூறியுள்ளது.

'ஆளுநருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள் குழு ஆளுநரது ஆரோக்கியத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது' என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆளுநர் வழக்கமான பரிசோதனைக்குத் தான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று ராஜ் பவன் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்