பாசனத்திற்காக வரட்டுப்பள்ளம் அணை திறப்பு!

செவ்வாய், 18 மார்ச் 2008 (17:49 IST)
ஈரோடு அருகே பாசனத்திற்காக வரட்டுப்பள்ளம் அணை திறக்கப்பட்டது.

ஈரோடு அடுத்துள்ளது அந்தியூர். இதன் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. அந்தியூர், கெட்டிசமுத்திரம், சந்திபாளையம், வேம்பத்தி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு இந்த அணையில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது.

வட்டக்காடு, சங்கராபாளையம், புதுப்பாளையம், செல்லம்பாளையம், புதுக்காடு, ஊஞ்காடு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மூவாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்பகுதியில் பெய்த மழையால் மூன்று முறை அணை நிரம்பியது. அந்தியூர் பகுதியில் இந்த மாதத்தில் பருத்தி, மக்காசோளம், சூரியகாந்தி போன்ற பயிர் சாகுபடியை விவசாயிகள் துவக்குவர். இதற்காக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

வரட்டுப்பள்ளத்தில் இருந்து மாசி பட்டத்துக்காக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் குருசாமி மதகை திறந்தார். மதகுகளில் தண்ணீரை பெருக்கெடுத்து ஓடியதை பார்த்த விவசாயிகள் மலர் தõவி தண்ணீரை வரவேற்றனர்.

அணையின் நீர்மட்ட உயரம் 31 அடி. தற்போது 30 அடி தண்ணீர் உள்ளது. நேற்று முதல் 86 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். மூவாயிரம் ஏக்கர் பயன்பெறும். பயிர் நடவு சமயத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்தியூர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணை திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்திரசேகர், உதவி செயற்பொறியாளர் ராஜ், பாசன விவசாயிகள் சங்க தலைவர் நாகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்