வே‌ன்- பேரு‌ந்து மோத‌ல்: 4 பே‌‌‌ர் ப‌லி!

செவ்வாய், 18 மார்ச் 2008 (12:45 IST)
மதுரை- ‌தி‌ண்டு‌க்க‌ல் தே‌‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் உ‌ள்ள சமயந‌ல்லூ‌‌ரி‌ல் த‌னியா‌ர் பேரு‌ந்து‌ம்- வேனு‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌திய ‌விப‌த்‌தி‌ல் 4 பே‌ர் ப‌லியா‌யின‌ர். 7 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

க‌ர்நாடகா மா‌நில‌ம் மா‌ண்டியா மாவ‌ட்ட‌த்தை சே‌ர்‌ந்த 11 பே‌ர் கொடை‌க்கானலு‌க்கு வே‌னி‌ல் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தன‌ர். மதுரை- ‌தி‌ண்டு‌க்க‌ல் தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் உ‌ள்ள சமயந‌ல்லூ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் வே‌ன் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தபோது எ‌திரே வ‌ந்த த‌னியா‌ர் பேரு‌ந்து ம‌ீது நேரு‌க்கு நே‌ர் மோ‌‌தியது.

இ‌‌தி‌ல் வே‌னி‌ல் இரு‌ந்த செ‌ந்தூர‌ம்மா‌ள் (48), உமே‌‌‌ஷ் (35) ஆ‌கியோ‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியா‌யின‌ர். ஏழு பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ராஜா‌‌ஜி அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தன‌ர்.

இ‌தி‌ல் ‌சி‌‌கி‌‌ச்சை பல‌னி‌ன்‌றி பெரையா (40), ‌‌லி‌கிதா (14) ஆ‌கியோ‌ர் இ‌ன்று உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். மேலு‌ம் 4 பே‌ர் ‌நிலைமை கவலை‌‌க்‌கிடமாக உ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்