நாளை தமிழக சட்ட‌ப் பேரவை கூடுகிறது: 20ஆ‌ம் தே‌தி பட்ஜெட் தாக்கல்!

செவ்வாய், 18 மார்ச் 2008 (11:40 IST)
த‌மிழச‌ட்ட‌ப் பேரவை நாளதொட‌ங்கு‌கிறது. 20 ஆ‌மதே‌தி ‌நி‌தி அமை‌ச்ச‌ரஅ‌ன்பழக‌ன் 2008-09ஆ‌மஆ‌‌ண்டி‌ற்காப‌ட்ஜ‌ெ‌ட்டதா‌க்க‌லசெ‌ய்‌கிறா‌ர்.

தமிழக சட்ட‌ப் பேரவை கூ‌ட்ட‌ததொட‌ரநாளை காலை 9.30 மணிக்கு தொட‌‌ங்கு‌கிறது. அ‌ப்போது, மறைந்த முன்னாள் சபாநாயகர் ராஜாராம், மார்க்சிஸ்டக‌ட்‌சி‌யி‌னமு‌ன்னா‌ளச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஹேமச் சந்திரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ‌பி‌ன்ன‌ரகூ‌ட்ட‌மஒத்தி வைக்க‌ப்படு‌கிறது.

இதை‌ததொட‌ர்‌ந்தஅலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், சட்ட‌ப் பேரவை கூ‌ட்ட‌ததொடரை எத்தனை நாள் நடத்துவது, பட்ஜெட் விவாதத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

20ஆ‌மதே‌தி காலை 9.30 மணிக்கு ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் 2008-09 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார். ஆட்சிக்கு வந்த பிறகு ‌தி.மு.க. அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில் த‌‌மிழக ம‌க்களு‌க்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தெ‌ரி‌கிறது. குறிப்பாக வேளாண் மைத்துறை வளர்ச்சிக்கும், விவசாயிகள் நலனுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

மேலு‌ம் பல்வேறு துறைகளின் கோரிக்கைகள், வரி சலுகைகள் போன்றவையும் நிறைவேற்றப்படலாம். மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகளை தொடர்ந்து தமிழக அரசும் புதிய சலுகைகளை அறிவிக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2007-08ஆம் ஆண்டுக்கான துணை பட்ஜெட், 2008-09ஆம் ஆண்டுக்கு முதல் 3 மாதங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மா‌ர்‌ச் 26ஆ‌ம் தேதி தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த கூட்டத் தொடர் மே மாதம் முதல் வாரம் வரை நடைபெறலாம் என்று தெ‌ரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்