‌திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட நெடுஞ்சாலையை சீரமை‌க்க ரூ.4 கோடி ஒது‌க்‌கீடு!

செவ்வாய், 18 மார்ச் 2008 (11:55 IST)
திருநெ‌ல்வே‌லி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் தே‌சி‌ய நெடு‌‌ஞ்சாலைகளை ‌‌சீரமை‌க்கு‌ம் ‌ப‌ணி‌க்கு 4 கோடி ரூபா‌ய் அனுமதி அளித்து மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தே‌சிய நெடு‌ஞ்சாலை எ‌ண் 208-ல் கோட்டைவாசல்-புளியரை சாலை பகுதியை மேம்படுத்த ரூ.2.9 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை கேரள மாநிலத்தில் கொல்லத்தில் துவங்கி செங்கோட்டை, தென்காசி, சிவகிரி, ராஜபாளையம் ஆகிய முக்கிய ஊர்களில் வழியாக திருமங்கலத்தில் முடிவடைகிறது. மேலும் இந்தச் சாலை குற்றாலம், மதுரை ஆகிய சுற்றுலாத் தலங்களையும் இணைக்கிறது.

மேலு‌மஅததே‌சிநெடு‌ஞ்சாலை‌யி‌ல், வாசுதேவநல்லூர், சிவகிரியில் சிறுபாலங்கள் சீரமைப்பதற்கரூ.94 லட்சங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புளியங்குடி அருகில் உள்ள சிந்தாமணி சந்திப்பில் ஒய்-சந்திப்பு மேம்பாட்டிற்கரூ.29 லட்சங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்