ஆறுமுகசாமிக்கு மாத‌ந்தோறு‌ம் நிதியுதவி: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!

செவ்வாய், 18 மார்ச் 2008 (09:33 IST)
webdunia photoFILE
''ஓதுவார் ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவியும், ரூ.15 மருத்துவப்படியும் வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‌சிதம்பரம் கோ‌யிலில் தேவார பாடல்களை பாடுவதற்கு நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் ஓதுவார் ஆறுமுகசாமி. அவர் தேவார திருவாசகப் பாடல்களை இசையோடு பாடுவதில் வல்லவராகவும், தமிழறிஞர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

முதுமையிலும் உணர்வு குன்றாது தமிழ் மொழி பண்பாட்டு மரபுகளை பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும் கொண்டுள்ள மன உறுதியை போற்றிப்பாராட்டும் வகையில் அவருக்கு தமிழறிஞர் நிதியுதவி திட்டத்தின் கீழ் இந்த மாதம் 1ஆ‌மதேதி முதல் அவரது வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் நிதியுதவியும், பதினைந்து ரூபாய் மருத்துவப்படியும் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்