சத்தியில் வழி தவறிய யானைக்குட்டி: வனத்துறையினர் மீட்டனர்!

திங்கள், 17 மார்ச் 2008 (20:00 IST)
ஈரோடு அருகே வழிதவறி வந்து த‌ண்‌‌ணீ‌ரி‌ல் த‌த்த‌ளி‌த்து‌க் கொ‌‌ண்டி‌ருந்த யானை‌க் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளதபவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியிலகாட்டயானைகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகிறது. தற்போது யானைககூட்டங்களில் இளங்குட்டிகள் அதிகமாக காணப்படுகிறது.

நேற்று காலை பவானிசாகர் அணையின் நீர்தேக்கபபகுதியான சுஜிலகுட்டை வெள்ளைமொக்கை பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நீர் தேக்கபபகுதியில் ஆ‌‌ண் யானைக்குட்டி ஒ‌ன்று தண்ணீ‌ரி‌லதவ‌றி ‌விழு‌ந்து த‌த்த‌ளி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்ததை‌ப் பார்த்தனர்.

சுற்றியுள்ள பகுதியில் அதன் தாய் யானை இ‌ல்லை எ‌ன்பது தெ‌ரி‌ந்தது‌ம், உடனடியாக மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

webdunia photoWD
இதையடு‌த்து மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம், பவானிசாகர் ரேஞ்சர் மோகன், வனவர் கருப்புசெட்டி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்குட்டியை பரிசல் மூலம் பத்திரமாக ‌மீ‌ட்டு பவானிசாகர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு கோவை மண்டல வனத்துறை மருத்துவர் மனோகரன் யானைக்குட்டியை பரிசோதித்து ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார். அந்த ஆண் யானைக்குட்டிக்கு நான்கு மாதங்கள் இருக்கும் என்றார்.

மேற்கொண்டு இந்த யானைக்குட்டியை வண்டலூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் விடுவதா அல்லது முதுமலை வனப்பகுதியில் விடுவத என ஆலோசித்து வருகின்றனர்.