செங்குன்றம் அருகே கோயில் காவலாளிகளை தாக்கி அம்மன் கோயிலில் உள்ள நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
செங்குன்றம் அருகே அலமாதியில் பிடாரிம்மன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றது.
இதை பார்த்த காவலாளிகள் மணி அவரது தம்பி முத்து ஆகியோர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டினர்.
பின்னர் அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி, உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.