பால்விலை உயர்வை ரத்து செய்யவு‌ம்: ஜெயலலிதா!

ஞாயிறு, 16 மார்ச் 2008 (14:20 IST)
தேவையான பணம் இருக்கின்றது என்று கூறும் கருணாநிதி அந்த பணத்தை வைத்து ஆவின் நிர்வாகத்தின் நஷ்டத்தைப் போக்கி உயர்த்தப்பட்ட பாலின் விலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டுள்ள அறிக்கையில், எனது ஆட்சி காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததால் அதற்கேற்றாற் போல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. தற்போல் பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த உயர்வை நுகர்வோரின் மீது திணிப்பை தான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சேபிக்கிறது.

2004-ம் ஆண்டு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பாலின் கொள்முதல் விலையை உயர்த்திய போது நுகர்வோர் நலன் கருதி பாலின் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தான் நான் எனது முந்தைய அறிக்கையில் வலியுறுத்தினேன். இதை பின்பற்ற மனமில்லாமல், கருணாநிதி மக்களை குழப்ப முயற்சிக்கிறார். தி.மு.க. அரசு பொறுபேற்ற 21 மாதங்களுக்குள் 2 முறை பால் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

யார் ஆட்சி காலத்தில் பாலின் விலை அதிக அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது. யார் பொய் புராணம் பாடுகிறார்கள் என்பதை மக்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள். திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதை விட்டு விட்டு எல்லாவற்றிற்கும் அரசிடம் தேவையான பணம் இருக்கின் றது என்று கூறும் கருணாநிதி அந்த பணத்தை வைத்து ஆவின் நிர்வாகத்தின் நஷ்டத்தைப் போக்கி உயர்த்தப்பட்ட பாலின் விலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்