சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க ஆய்வு: ஆற்காடு வீராசாமி!

ஞாயிறு, 16 மார்ச் 2008 (12:12 IST)
குறைந்த செலவில் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பது பற்றி ஆய்வு செய்ய தமிழக அதிகாரிகள் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌ல் ‌மி‌ன்சார‌த்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழ்நாடு ஆற்றல் மேம்பாட்டு கழக (தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மெண்ட் ஏஜென்சி) சேர்மன் மற்றும் தலைமை பொ‌றி‌யாள‌ர் ஆகியோர் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

குறைந்த செலவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க எளிதான தொழில் நுட்பம் எதுவும் இருக்கிறதா? என்பது குறித்து ஆராய இருக்கிறார்கள். சூரிய ஒளி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.22 கோடி செலவாகிறது. இதை ரூ.10 கோடியாக குறைக்க முடிந்தால் மத்திய அரசு உதவியுடன் இதில் அதிக அளவில் ஈடுபடலாம்.

போதிய காற்று வீசாததால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி குறைந்துவிட்டதற்கு இது தான் காரணம். தற்போதைய பற்றாக்குறையை சரி செய்ய 400 மெகாவாட் மின்சாரம் தேவை ஆகும். பவர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் இருந்து 200 மெகாவாட் மின்சாரம் கோடைக்காலத்தில் வாங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌‌‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்