மாநிலங்களவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் பாலகங்கா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 26.03.2008 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான தேர்தலில் அ.இ.அ.தி.மு.க- ம.தி.மு.க கூட்டணி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அ.இ.அ.தி.மு.க சார்பில் ஒரு வேட்பாளரும், ம.தி.மு.க சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்படுகிறார்கள். அ.இ.அ.தி.மு.க.வில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் பிரிவு இணை செயலாளர் நா.பாலகங்கா நிறுத்தப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் ம.தி.மு.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், அக்கட்சிக்கு ஜெயலலிதா ஒரு இடம் ஒதுக்கி உள்ளார். அக்கட்சி சார்பில் வேளச்சேரி மணிமாறன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.