உலக கேரம் சா‌ம்‌பிய‌ன் இளவழகிக்கு ரூ.10 லட்சம்!

புதன், 12 மார்ச் 2008 (10:15 IST)
webdunia photoFILE
கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை இளவழகிக்கு ஊக்கப்பரிசாக ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதகு‌றி‌த்ததமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த கேரம் விளையாட்டு வீராங்கனை செல்வி இளவழகி, சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ள அவர் சாதனையை பாராட்டி, அவரை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப்பரிசாக ரூ.10 லட்சம் வழங்கிட அனுமதி அளித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்