பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜெயலலிதா!

செவ்வாய், 11 மார்ச் 2008 (14:35 IST)
''மக்களின் மீது தொடர்ந்து விலை ஏற்றத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் திணித்து வரும் மக்கள் விரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, பாலின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.20 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்ற காரணத்தை கூ‌றி தி.மு.க. அரசு ஆ‌வி‌ன் பா‌ல் ‌விலையை உயர்த்தியது. தற்போது இரண்டாவது முறையாக ஆவின் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம், தற்போதுள்ள 13 ரூபாய் 75 காசில் இருந்து 15 ரூபாய் 75 காசு என்ற அளவிற்கு தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்டிருக்கிறது.

கொள்முதல் விலையை ஏற்றி, விற்பனை விலையை ஏற்றாமல் விட்டுவிட்டால் 100 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி, விலை உயர்வை நியாயப்படுத்தி இருக்கிறார் துறைக்கே தொடர்பில்லாத மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி. ஆவின் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் என்பதையும், அதை சரிக்கட்ட விலை ஏற்றம் தொடரும் என்பதையும் சூசகமாக மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் ஆற்காடு வீராசாமி.

இந்த விலை ஏற்றத்தா‌ல் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள். மக்களின் மீது தொடர்ந்து விலை ஏற்றத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் திணித்து வரும் மக்கள் விரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, பாலின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்