முல்லைப் பெரியாறு அணை மிக பலவீனமாக உள்ளதென்றும், அதன் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேரளத்தைச் சேர்ந்த ஜன சக்தி எனும் அரசு சாரா அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
நீதிபதி ஹரிஜித் பசாயத், சி.கே.ஜெயின் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரணக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் அம்மனுவை நிராகரிப்பதாக கூறினர்.
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக இரு மாநில அரசுகளும் கூடுதல் பிரமாண பத்திரம், ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வழங்கினர்.
இந்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளிவைப்பதாகவும் அறிவித்தனர்.