தமிழக‌த்து‌க்கு ரூ.1,179 கோடி கடன் உதவி!

செவ்வாய், 11 மார்ச் 2008 (09:57 IST)
தமிழக‌த்து‌க்கு ஜ‌ப்பா‌ன் அரசு 1,179 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் ‌ம‌த்‌திய ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் மு‌ன்‌னிலை‌யி‌ல் நேற்று கையெழுத்தானது.

இந்தியாவில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களுக்கு ஜப்பான் அரசு கடன் உதவி வழங்குகிறது. அவற்றில் 7 திட்டங்களுக்கு அளிக்கப்படும் கடன் தொகைக்கான பணப் பரிமாற்ற ஒப்பந்தம் நேற்று மத்திய நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்தியாவிற்கான ஜப்பான் நாட்டுத் தூதர் டோமிச்சியும், மத்திய நிதித்துறை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணாவும் மத்திய நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த பரிமாற்றத்தில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்கான ரூ.853 கோடியே 39 லட்ச ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புற கட்டுமானத் திட்டத்திற்கான 325 கோடியே 96 லட்சமும் அடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்