பு‌திய ‌விடியலை நோ‌க்‌கி மக‌ளி‌ர்: ஜெயலலிதா வாழ்த்து!

வெள்ளி, 7 மார்ச் 2008 (13:32 IST)
புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும்'' எ‌ன்ற அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மகளிர் தின விழா வாழ்‌த்து செ‌ய்‌தி‌யி‌ல், ஆண்டாண்டு காலமாக அடங்கிக் கிடந்த பெண்மை வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது. இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

ஆனாலும் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறவர்களாய் அடக்கு முறையில் வீழ்ந்து கிடக்கிறவர்களாய் இன்னும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வீழ்ச்சியுற்ற தேகத்தில் எழுச்சி வேண்டும். விசையொடிந்த உள்ளத்தில் வலிமை வேண்டும். புதுமைப் பெண்மை புத்துலகம் படைக்கின்ற திருநாள் விரைவில் வர வேண்டும்.

அந்தப் புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும். தையலை உயர்வு செய்! என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும். உலகப் பெண்மைக்கு என் உளமார்ந்த வாழ்த்து! தமிழகப் பெண்மைக்கு என் தனிப்பட்ட வாழ்த்துக்கள். வெல்க பெண்மை! எ‌‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்