போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு செல்ல முயன்ற ஆப்பிரிக்க நாட்டினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
காங்கோ நாட்டைச் சேர்ந்த மனாங்கா டொக்கும்போ (36) லுஃப்தான்சா விமானத்தின் மூலம் இன்று காலை ஜெர்மனிக்கு செல்ல முயன்றபோது, விமான நிலைய அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை ஆய்வு செய்தனர். அதில் அந்த கடவுச்சீட்டு போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு காங்கோவில் இருந்து மும்பைக்கு வந்ததாகவும், அங்குதான் ஒரு முகவர் போலி கடவுச்சீட்டு கொடுத்தாகவும் கூறியுள்ளான்.
விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு, மனாங்கோ குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.