ரேச‌ன் கடை‌யி‌ல் எடை குறை‌ந்தா‌ல் கடு‌ம் நடவடி‌க்கை : அரசு எ‌ச்ச‌ரி‌க்கை!

செவ்வாய், 4 மார்ச் 2008 (18:50 IST)
பொதுவிநியோதிட்டத்தில் (ரேச‌ன்) உரிமுறையிலபொருட்களவிநியோகிக்காவிற்பனையாளர்களமீதகடுமநடவடிக்கஎடுக்கப்படுமஎன்று உணவுத்துறஅமைச்சர் எ.வ. வேலஎச்சரித்துள்ளார்.

சென்னமாநகரிலபொதவிநியோகததிட்டத்தினசெயல்பாடுகளதொடர்பாநாமக்கலகவிஞரமாளிகையிலஇன்றஉணவஅமைச்சரதலைமையிலகூட்டமநடந்தது.

கூட்டத்ததுவக்கி வைத்ததமிழஉணவுத்துறை அமைச்சர் வேலு பேசியதாவது:

பொதுவிநியோதிட்டத்தில், சென்னை மாநகரில் உள்ள வ.உ.சி. நக‌ர், ராயபுரம், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், திருவொற்றியூர் ஆகிய மண்டலங்களைசசேர்ந்மக்களுக்கஏதேனும் குறைகள் ஏற்பட்டால் துணை ஆணையர் (வடக்கு) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறை தொலைபேசி எண்: 28551028-லும், மைலாப்பூர், பரங்கிமலை, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, தி.நகர் மற்றும் தாம்பரம் ஆகிய மண்டலங்களில் உள்ளவர்கள் துணை ஆணையர் (தெற்கு) அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 28551026-லும் புகார்கள் செய்யலாம்.

'நியாயவிலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் பொருட்கள் வழங்கப்படாமல் குறைவாக வழங்கப்பட்டாலும், இருப்பு இல்லை என்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் தெரிவித்தாலும், குடும்ப அட்டை வழங்க காலதாமதம் போன்ற குறைபாடுகளஇருந்தாலும் பொதுமக்கள் அலுவலக நேரத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார்கள் செய்யலாம். அவர்களுடைய புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன் புகார் மனு தாரர்களுக்கும் உரிய பதில் அளிக்கப்படும்.

கூட்ட நேரங்களில் புதிகுடும்அட்டைகளுக்காமனுக்களை பெறும் அலுவலர்கள் விடுமுறையில் சென்றால் உதவி ஆணையர்கள் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மனுக்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை செய்யும் விசாரணை அலுவலர் அன்றைய தினமே உதவி ஆணையர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்வேண்டும். மெத்தனமாகவும், அலட்சிய மனப்பான்மையுடன் பணி புரியும் அலுவலர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்