மது‌வில‌க்கை அம‌ல்படு‌த்த ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்து‌ங்க‌ள்: ராமதா‌சி‌‌‌ற்கு டி.ஆ‌ர்.பாலு ப‌தில்!

திங்கள், 3 மார்ச் 2008 (17:45 IST)
மது‌வில‌க்கஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கை‌யி‌லஉறு‌தியாஇரு‌ப்பதானா‌லம‌த்‌திஅரசவ‌ற்புறு‌த்‌தி அ‌கிஇ‌ந்‌திஅள‌வி‌லகொ‌‌ள்கமுடி‌வினஎடு‌ப்பத‌ற்காமுய‌ற்‌சிகளமே‌ற்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றா.ம.க. ‌நிறுவன‌ரமரு‌த்துவ‌ரராமதா‌சி‌ற்கம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழஅரசமதுவில‌‌க்கஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றா.ம.க. ‌நிறுவன‌ரமரு‌த்துவ‌ரராமதா‌ஸ், மா‌நில‌மமுழுவது‌மசு‌ற்று‌பபயண‌மசெ‌‌ய்த ‌நிலை‌‌யி‌லஅவரு‌க்கப‌தில‌ளி‌த்தம‌த்‌திசாலை‌, க‌ப்ப‌லபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ரடி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பா.ம.க. நிறுவனத் தலைவர் மரு‌த்துவ‌ரராமதாஸ், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக ஊருக்கு ஊர் பிர‌ச்சாரம் செய்து வருகிறார். மதுவில‌க்கஅம‌ல்படு‌த்‌தினா‌லதமிழக அரசுக்கு ஏற்படும் இழப்பாரூ.10 ஆயிரம் கோடியை ‌திரு‌ம்ப‌பபெஅவர் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்குப் பிரச்சனை தமிழகத்திற்கு மாத்திரம் உரியதோ அல்லது வருவாயை மட்டும் பொறுத்ததோ அல்ல. இது அகில இந்திய பிரச்சனை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை செய்யும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ரத்து செய்தால், தமிழகம் எங்கும் கள்ளச்சாராயம் பெருகும். இதனால் பலர் உயிர்களை இழக்க நேரிடும்.

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., மதுவிலக்கினை அமல்படுத்தியதால் கள்ளச்சாராய வழக்கில் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேர் சிறையில் இருப்பதாக அறிவித்து, தமிழகத்திலே மீண்டும் மது விற்பனை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று ஆனந்த விகடன் இதழிலே கட்டுரையை எழுதினார் என்பதை மறந்துவிட முடியாது.

எனவே, டாக்டர் ராமதாஸ் மதுவிலக்கு பிரச்சினையில் தீவிரமாக இருப்பதுடனமத்திய அரசை வற்புறுத்தி அகில இந்திய அளவில் ஒரு கொள்கை முடிவெடுப்பதற்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டும்.

அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுமானால், அதைத் தி.மு.க.வும் வரவேற்கும். டாக்டர் ராமதாஸ் இதனை செய்தால் அது நாட்டுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. இவ்வாறு அறிக்கையில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்