சென்னையில் கைத்தொழில் பொருட்கள் கண்காட்சி!

திங்கள், 3 மார்ச் 2008 (17:29 IST)
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய குடிசைத் தொழில் கழகத்தின் "காட்டேஜ் மேளா" கைத்தொழில் பொருட்கள் கண்காட்சி சென்னையில் துவ‌ங்‌கியது.

மிகவும் நவீனமான கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தும் பொருட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு‌ள்இந்த‌கண்காட்சியில், இந்தியா முழுவதிலுமிருந்தும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.

இக்கண்காட்சியில் சந்தனமர சிற்பங்கள், ரோஸ்வுட் பொருட்கள், டெராகோட்டா அலங்கார நகைகள், மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான் மாநில ஓவியங்கள், வெண்கலம், பித்தளையாலான அழகிய சிற்பங்கள், படுக்கை விரிப்புகள், சணல் பொருட்கள், மத்திய பிரதேச மாநில சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரு‌கிற 10ஆ‌மதே‌தி வரஇக்கண்காட்சி நட‌க்உ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்