‌சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌யி‌ல் ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் 11 பே‌ர் கைது!

திங்கள், 3 மார்ச் 2008 (16:08 IST)
சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌யி‌லி‌ல் ‌சி‌த்‌சிதை ‌திரு‌ச்‌சி‌ற்ற‌ம்பல மேடை‌யி‌ல் த‌மி‌ழி‌ல் தேவார‌ம், ‌திருவாசக‌ம் பாடுவத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து ரகளையில் ஈடுபட்டதுட‌‌ன் காவல‌ர்களையு‌ம் தா‌க்‌கியதாக 11 ‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடலாம் எ‌ன்று கடந்த 29-ந்தேதி இ‌ந்து அறநிலையத்துறை செயலாளர் சந்தானம் உத்தரவு பிறப்பித்ததை அடு‌த்து, சிதம்பரத்தை சேர்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாட நே‌ற்று காலை தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார்.

அ‌ப்போதஅவரை தீட்சிதர்கள் தடுத்ததா‌ல், காவல‌ர்களு‌க்கு‌ம் தீட்சிதர்களுக்கும் இடையே மோத‌ல் உருவானது. பல‌த்த முய‌ற்‌சி‌க்கு‌ப் ‌பிறகு ‌திரு‌ச்ச‌ி‌ற்ற‌ம்பல மேடை‌யி‌ல் ஏ‌றிய ஆறுமுகசாமி தேவாரம் பாட தொடங்கினார். அப்போது நடராஜர் சிலையை மறைத்த படி 30-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் நின்றனர்.

இதையடு‌த்து சிவனடியார் ஆறுமுகசாமி தனது ஆதரவாள‌ர்களுட‌ன் ‌மீ‌ண்டு‌ம் மாலை வந்தார். ஆனா‌ல் அவரை‌க் காவல‌ர்க‌ள் கோ‌யிலு‌க்கு‌ள் அனுமதிக்கவில்லை. அ‌ப்போது திடீரென காவல‌ர்க‌ளி‌‌ன் மீது கல் வீசப்பட்டதில் ஒரு காவல‌ர் காயமடை‌ந்தா‌ர். இதையடு‌த்து காவல‌ர்க‌ள் தடியடி நடத்‌தினர்.

இ‌ந்‌நிலை‌யி‌‌ல், காவல‌ர்களை‌ப் பணி செய்ய விடாமல் தடுத்தல், வ‌ன்முறைக‌ளி‌ல் ஈடுபடுத‌ல்௦ உ‌ள்‌ளி‌ட்ட கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ளி‌ன் பே‌ரி‌‌ல் சிவனடியார் ஆறுமுகசாமி ஆதரவாளர்கள் 34‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் மீது வழக்குப்பதிவு செய்ய‌ப்ப‌ட்டது. இதில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், அரசு உத்தரவை அமுல்படுத்த முயன்ற காவல‌ர்களை‌த் தா‌க்‌கியத‌ற்காக 12 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்ய‌ப்ப‌ட்டது.

இ‌தி‌ல் 1. சிவகிருபாகர தீட்சிதர் 2. தனசேகர தீட்சிதர் 3. சாம்பமூர்த்தி தீட்சிதர் 4. அய்யப்பன் தீட்சிதர் 5. நவமணி தீட்சிதர் 6. வாசுதேவன் தீட்சிதர் 7. காசிராஜ தீட்சிதர் 8. சேத்திரபால தீட்சிதர் 9. கிரிஜாபதி தீட்சிதர் 10. ராஜசேகர தீட்சிதர் 11. நடராஜன் ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

கைதானவர்கள் அனைவரு‌ம் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்