தமிழகத்தில் திருவாரூர், பெரம்பலூர் (அரியலூரை உள்ளடக்கியது), கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களின் நிர்வாகத்தை முற்றிலும் கணினிமயமாக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.இராசா ரூ.12.57 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, நாட்டில் உள்ள மாவட்டங்களை கணினிமயமாக்கும் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் பீகாரில் மூன்று மாவட்டங்களிலும் முன்னோடித் திட்டமாக இவை செயல்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டங்களின் வெற்றியை பொருத்து பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
கணினிமயமாக்கலின் மூலம், பொது மக்கள் குறை தீர்ப்பது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் தகவல்களை அளிப்பது, வரிகள், கட்டணங்களை வசூலிப்பது, சமூக நலப் பணிகளை மேற்கொள்வது, நீதிமன்றங்களின் கோப்புகளைக் கையாள்வது பணிகளை எளிதாக்கி மக்களுக்கு சிறந்த முறையில் சேவை அளிக்க முடியும்.