தமிழகத்தில் நாகர்கோவிலை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண்.47பி-ஐ சீரமைப்பதற்காக ரூ.14.92 கோடியை ஒதுக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அனுமதி அளித்துள்ளார்.
இந்த நிதியைக் கொண்டு நாகர்கோவில்-பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக காவல்கிணறு வரையிலான 22 கி.மீ. நீளமுடைய சாலை வலுப்படுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் எண்.7, 47ஐ இணைக்கும் முக்கியமான சாலையான இது, கடந்த பருவமழை காலத்தில் கடும் பாதிப்புக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.