இளைஞர் பாசறை‌யி‌ல் அ‌திக உறு‌ப்‌பின‌ர்களை சே‌ர்‌க்க வே‌ண்டு‌ம்: ஜெயலலிதா!

புதன், 27 பிப்ரவரி 2008 (13:03 IST)
அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் இளைஞ‌ர் பாசறை, இள‌ம் பெ‌ண்க‌ள் பாசறை‌யி‌ல் அ‌திக உறு‌ப்‌பி‌‌ன‌ர்களை சே‌ர்‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்று ‌நி‌ர்வா‌கிகளை அ‌க் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை அமைப்பது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் ‌மா‌ர்‌ச் 7ஆ‌ம் தேதி முதல் 13ஆ‌ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும், இளம்பெண்களும் தங்கள் இடங்களுக்கு வருகை தரும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் தங்களைப் பாசறையின் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் அனைவரும் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக வருகை தரும் மாவட்ட பொறுப்பாளருக்கும், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கும் உரிய ஒத்து ழைப்பை நல்கி அதிக அளவில் பாசறை உறுப்பினர்கள் சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயலலிதா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்