த‌மிழக ப‌ட்ஜெ‌ட் ம‌க்களு‌க்கு ப‌‌ணியா‌ற்று‌கி‌ன்ற வரவு செலவு ‌தி‌ட்டமாக இரு‌க்கு‌ம்: முத‌ல்வ‌ர்!

புதன், 27 பிப்ரவரி 2008 (09:52 IST)
''த‌மிழக ப‌ட்ஜெ‌ட் மக்களுக்கு பணியாற்றுகின்ற ஒரு வரவு செலவு திட்டமாக இருக்கும்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

கிருஷ்ணகிரி‌யி‌ல் புதிய ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம், பேரு‌ந்து நிலையத்தை திறந்து வைத்தும், ஓசூர் மென்பொருள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியும், ரூ.100 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வழங்கி பேசுகை‌யி‌ல், எங்களுக்கெல்லாம் வழி காட்டிய அறிஞர் அண்ணா முலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன், அவர்களே சென்னையிலே தலைமைச் செயலகத்தில் மைதானத்திலே அலுவலர்கள் கூடக்கூடிய ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி அவர்களுடைய கடமையினை அமைச்சர்களாகிய எங்களுடைய கடமையினை மக்களிடத்திலே எத்தகைய தொடர்பை நீங்கள் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி நீங்கள் கடமையாற்றினால் நாங்கள் எங்களுடைய கடமையை செவ்வனே செய்ய முடியும்.

நாங்கள் கடமையிலே தவறினால் எங்களுக்கு உரிய தண்டனை மக்கள் கொடுப்பார்கள் அடுத்த தேர்தலில். நீங்கள் கடமையிலே தவறினால் அந்த தண்டனையை அரசிலே வீற்றிருக்கின்ற நாங்கள் கொடுப்போம். அதுதான் இன்றைக்கு இருக்கின்ற அதிகாரத்தினுடைய தன்மை என்றும் குறிப்பிட்டார். நான் அதைச் சொல்லி சுற்றி வளைத்து வருவதற்கு காரணம் அலுவலாளர்களாக இருந்தாலும் சரி அல்லது என்னை போன்ற அமைச்சர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சிறு தவறுக்கும் இடம் தராமல் மக்கள் பிரச்சினையிலே தங்கள் மனத்தைச் செலுத்தி மனசாட்சிக்கு விரோதமில்லாமல் அவர்களுக்கான நன்மைகளை செய்யவேண்டும்.

நம்முடைய தமிழக அரசினுடைய பட்ஜெட் வரஇருக்கின்றது. அந்த வரவு செலவு திட்டத்தை நம்முடைய நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் சட்டமன்றத்திலே வைக்க இருக்கின்றார். அதுபற்றிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வரவு செலவு திட்டம் விவசாயத்தை - வேளாண்மையை முக்கியமாக வைத்து நடுநாயகமாக வைத்து மக்களுக்கு பணியாற்றுகின்ற ஒரு வரவு செலவு திட்டமாக இருக்கும். விவசாயிகள் வாழவும், அவர்களுக்கு பயிர்பாதுகாப்பு போன்ற திட்டங்கள், அவர்களுக்கு வெற்றிகரமாக நிறைவேறவும் இன்றைக்கு உலகத்திலே பயிரை வளர்ப்பதற்கு என்னென்ன சுலபமான முறைகள் இருக்கிறதோ அந்த முறைகளெல்லாம் தமிழகத்திலே உள்ள விவசாயிகள் கற்றுக் கொள்ள அதிலே பயிற்சி பெறவுமான பல திட்டங்களை வரவு செலவு திட்டம் ஏந்தி வரும் என்பதையும் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்காக - வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்காக என்னனென்ன செய்ய வேண்டுமோ அவைகளெல்லாம் அந்த வரவு செலவு திட்டத்திலே - தமிழக அரசினுடைய பட்ஜெட்டிலே இடம் பெறும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பே‌சினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்