செ‌ன்னை‌யி‌ல் நாளை முதல் வேலைவாய்ப்பு கண்காட்சி!

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (09:35 IST)
சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் நாளை முதல் 29‌ஆ‌மதேதி வரை வேலைவாய்ப்பு கண்காட்சி நடக்கிறது.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை, வேலைவாய்ப்புகள் என பல்வேறு தலைப்புகளில் பலர் பேசுகின்றனர். தொழில்வாய்ப்புகள் குறித்த விளக்க கண்காட்சியும் நடைபெறும்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இதை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்துகிறது. இத்தகவல், சென்னை ஆ‌ட்‌சிய‌ரஅலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்