இது குறித்துக் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சின்ஹா, "தமிழகத்தில் கூட்டணி வைப்பதற்கு தகுந்த கட்சியாக அ.இ.அ.தி.மு.க.வை கருதுகிறோம். எனவே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. அணியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்தால் அ.இ.அ.தி.மு.க.வை அணுகுவதே சரியானதாக இருக்கும் என நினைக்கிறோம்" என்றார்.
இல.கணேசன் பேட்டி!
முன்னதாக பா.ஜ.க.வின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சேது சமுத்திர திட்டம், ராமர் பாலத்தை பாதுகாப்பது, நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்றது போன்ற பல்வேறு விடயங்களில் பா.ஜ.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் ஒத்த கருத்துடையதாக உள்ளன. இதனால் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.