இது குறித்து, மீனவர் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மீனவர் நலவாரியம் மூலம் மீனவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம். விபத்தில் இறக்கும், மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். மீன் பிடிக்கும்போது இறக்கும் மீனவர் குடும்பத்துக்கு ரூ.20 ஆயிரமும், இயற்கை மரணம் அடைவோர் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரமும், இறுதிச் சடங்குக்கு ரூ.2,500-ம் வழங்கப்படும்.
மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் கல்வி நிதியாக ரூ.1,250 முதல் ரூ.6,750 வரையும், திருமண உதவித் தொகையாக ஆண்களுக்கு ரூ.3 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். மகப்பேறு உதவியாக ரூ.6 ஆயிரமும், கருக்கலைப்பு, கருச்சிதைவுக்கு ரூ.3 ஆயிரமும் பெறலாம். முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும்.
இந்த திட்ட உதவிகளைப் பெற 26-ந்தேதிக்குள் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பப் மனுக்களை பெற்று மீனவர் நலவாரிய உறுப்பினர்களாக சேர வேண்டும்.