நடிக‌ர்க‌ளி‌ன் க‌ட்‌சியுட‌‌ன் ஒருபோது‌ம் கூ‌ட்ட‌ணி‌யி‌ல்லை: ராமதா‌ஸ்!

சனி, 23 பிப்ரவரி 2008 (13:27 IST)
நடிகர்களின் கட்சியுடனோ அல்லது இனிமேல் நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எக்காரணத்தைக் கொண்டும் பா.ம.க. கூட்டணி வைத்துக் கொள்ளாது என அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள் அறிக்கையில், நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ அல்லது இனிமேல் நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எக்காரணத்தைக் கொண்டும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டோம். அதேபோல் நடிகர்களின் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டுச் சேர மாட்டோம். எங்கள் கட்சியில் நடிகர் நடிகைகளை சேர்க்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த முடிவு புதுச்சேரி செயற்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும். இதில் இருந்து ஒருபோதும் விலகி செல்லமாட்டோம். பா.ம.க. என்பது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சிகள் போன்றதல்ல. தமிழர்கள் ஆதரிக்கும் செல்வாக்குள்ள ஒரு அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள், இக்கட்சியை சாதி கட்சி என்று முத்திரை குத்துவதற்கு இதுவரையில் படாத பாடுபட்டு அதில் தோற்றுப்போய் இருக்கின்றன" என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்