விரைவில் ரூ.44 கோடியில் குடிநீர் திட்டம் நிறைவு!
வியாழன், 21 பிப்ரவரி 2008 (12:35 IST)
அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ.44.12 கோடி மதிப்பிலான குடிநீர் வழங்கல் திட்டம் வரும் மே மாதம் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமனூர், செந்துரை, பஞ்சாயத்துக்குட்பட்ட 382 குடியிருப்பு வீடுகளுக்கும், அதே போல் பெரம்லூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், ஆலத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட 143 குடியிருப்பு வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கும்.
மேலும், இந்த திட்டத்தின் 70 விழுக்காடு பணிகள் முடிந்து விட்டதாகவும், இது போன்று ஜெயங்கொண்டம் பகுதியில் 281 குடியிருப்பு வீடுகள் பயன் பெறும் வகையில் ரூ.19.61 கோடி மதிப்பீட்டிலான திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சேவியர் கிறிஸ்ஸோ நாயகம் தெரிவித்துள்ளார்.