திருச்சியில் தே.மு.தி.க. சார்பில் மார்ச் 9ஆம் தேதி மகளிர் பேரணி நடைபெற உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பெண்கள் முன்னேற்றம் மிக அவசியம். பெண்களின் பெருமையை போற்றுவதற்காகவே உலக பெண்கள் தினம் மார்ச் 8ஆம் தேதி உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
திருச்சியில் மகளிர் அணி சார்பில் நடைபெறவுள்ள உலக மகளிர் தினத்தை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இதேபோல், கடந்த ஆண்டு மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினத்தை வேலூரில் தமிழகம் வியக்கும் வகையில் நடத்திக் காட்டப்பட்டதாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.