தமிழ் கட்டாய‌ப் பாடம் தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி: கருணாநிதி!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (15:07 IST)
தி.மு.க. அரசு சார்பில் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று வெளியிட்டு உள்ள கேள்வி-பதில் அ‌றி‌க்கை‌யி‌ல், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளை எல்லாம் முறையாக நடக்கவிடாமல் செய்தும், பெரியார் நினைவு சமத்துவ புரங்களையெல்லாம் இயங்க விடாமல் செய்தும், தி.மு.க. ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப்பணி யாளர்களை எல்லாம் அசூயை எண்ணத்துடன் வீட்டுக்கு அனுப்பியதைப் போல, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்ட தாயிற்றே, அதற்கு கட்டிடம் கட்ட நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டுமென்ற அற்பப் புத்தியோடு செயல்படாமல் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டுள்ளது.

ஆனால் அவசர புத்தியும், கெட்ட நினைப்பும் எப்போதும் கொண்ட அம்மையார் அவசர அவசரமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் என் மூளை யில் தானே முதலிலே உதித்தது என்று அறிக்கை விடுத்துள்ளார். அதனால் தான் அது இத்தனை காலம் மூலையில் கிடந்தது போலும்!

ஆன்மீகமும்- அறிவியக்கமும், ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று முதல்வர் புதிய உபதேசம் செய்கிறார். எல்லோரும் குழம்பிப் போய் உள்ளனர்'' என்று வைகோ பேசியிரு‌க்‌கிறா‌ர். வேலூர் நாராயணி ஆலய விழாவில் நான் பேசியது, "அறிவியக்கமும் ஆன்மீகமும் இரட்டைக் குழந்தைகள் - ஆனால் ஒட்டிப் பிறந்தவை அல்ல!'' என்ற வாசகமாகும். என் செய்வது, குழம்பிப் போனவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான்!

தோழமைக் கட்சித் தலைவி விடுதலைப்புலிகள் பற்றியும், அவர்களை ஆதரிப்பவர்கள் பற்றியும் இவர் மீது பாய்ந்த பொடா பற்றியும், நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் பக்கம் பக்கமாக அறிக்கை விடுகிறாரே, அந்த அறிக்கைகள் வெளி வந்த ஏடுகள் இவர் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க வில்லையோ? ஒருவேளை பழைய பாசத்தோடு எனது பேச்சுக்களையும், அறிக்கைகளையும் மட்டுமே இவர் அரைகுறையாகப் படித்துக் கொண்டிருக்கிறாரோ?

தி.மு.க. அரசு சார்பில் 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன் என்று நடிகர் ஒருவர் அறிக்கை விடுத்துள்ளா‌‌ர். அரசினால் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் கூடத் தான் இருக்கிறார்கள். ஒரு தொலைக் காட்சியில் சிலரது முகங்களை காட்டினால் கூட "பாவம்'' என்று கூட நினைத்து மறுத்த காலம் ஒன்று உண்டு. தற்போது அதே தொலைக்காட்சியில் அன்றைக்கு புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட வர்களின் முகங்கள் எல்லாம் தாராளமாகக் காட்டப்படுகின்றன. அதற்கு செஞ்சோற்று கடன் கழிக்க வேண்டாமா? அதன் விளைவு தான் அரசுக்கு எதிராக அவர்கள் பெயரால் தற்போது வெளிவரும் சில அறிக்கைகள் எ‌ன்று முத‌‌ல்வ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்