ஈரோட்டில் மேலும் 3 ‌நீ‌திம‌ன்ற‌ம் கட்ட அனுமதி

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (10:58 IST)
ஈரோடு மூன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் கட்டிக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் உதயச்சந்திரன் வழங்கினார்.

ஈரோடு மாநகரில் முதலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஈரோடு காரை வாய்க்காலில் செயல்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் எதிரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் வழக்குகளில் ஆஜராகி வாதாட வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் இருந்து இங்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே போல் சாட்சிகள், கைதிகள் ஆகியோரை காவ‌ல்துறை‌யின‌ர் அனைத்து நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலேயே மூன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும் இணைக்க வேண்டுமென 20 ஆண்டுகளாக வக்கீல்கள் அரசுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் அரசு ஆணை நேற்று வந்துள்ளது. இதனால் வழக்கறிஞர் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்