பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மீன்பிடிப்பு தொழில் சூடுபிடித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தை செழிப்பாக்கும் பவானிசாகர் அணை கடந்த ஆண்டு தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு மேல் அணையின் முழுகொள்ளவை எட்டிப்பிடித்து அணை நிறைந்து வரலாற்று சாதனை படைத்தது.
அணையில் இருந்து உபரி தண்ணீர் பவானி ஆற்றின்வழியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் தண்ணீரும் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது. அணை நிரம்பியது ஒரு புறத்தில் மகிழ்ச்சியை தந்தபோதிலும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அணையில் தண்ணீர் அதிகமாக இருந்தால் மீன்கள் வலையில் விழுவதில்லை. காரணம் மீன்கள் ஆழத்திற்கு சென்றுவிடுகிறது. மீனவர்கள் வலையை குறிப்பிட்ட ஆழம் வரை மட்டுமே செலுத்த முடியும். ஆனால் மீன்கள் வலை ஆழத்திற்கு கீழ் சென்றுவிடுவதால் வலையில் மீன்கள் விழாமல் போனது. இதன் காரணமாக மீன்பிடிப்பு தொழிலை மட்டும் நம்பிய இருந்த மீனவர்கள் ஊரை காலிசெய்து வேறு தொழில் தேடி பல்வேறு நகர்பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கினர்.
webdunia photo
WD
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை பெய்யாத காரணத்தால் குறிப்பாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீர் குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே சென்றது.
நேற்று அணையின் நீர்மட்டம் 93.84 அடி மட்டும் இருந்தது. அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் சகதி கழித்து 105 அடியாகும். அணைக்கு தற்போது வினாடிக்கு 2526 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணையில் மீன்பிடிப்பு தொழில் சூடுபிடித்துள்ளது. இதனால் வெளியூர் சென்ற மீனவர்கள்
webdunia photo
WD
மீண்டும் பவானிசாகர் வந்து மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 கிலோ மீன்களுக்கு மேல் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.