தமிழக‌ம் முழுவதும் 16, 17‌ல் இந்திய கம்யூனிஸ்‌ட் ஆர்ப்பாட்டம்!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (10:03 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக‌ம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்‌ட் க‌ட்‌சி ‌பி‌ப்ரவ‌ரி 16, 17 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்து‌கிறது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்‌‌ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்கும் சுங்கவரி, இறக்குமதிவரி ஆகியவற்றையும், மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியையும் குறைப்பதன் மூலம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை தவிர்க்கலாம் என தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்‌ட் கட்சி வலியுறுத்தியது. ஆனால் மத்திய ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இது எட்டவில்லை.

எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வினை கண்டித்து தமிழகம் முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ‌‌பி‌ப்ரவ‌ரி 16, 17 ஆகிய தே‌திக‌ளி‌ல் நடத்துமாறு கட்சியின் அணிகளை இந்திய கம்யூனிஸ்‌ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்