சேது ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற வ‌‌லியுறு‌த்‌தி ‌பி‌ப்.23 ‌ல் பேர‌ணி: க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (11:13 IST)
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆ‌கிஇரக‌ட்‌சிகளு‌மகூட்டாக, தூத்துக்குடியில் பிப்ரவரி 23-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் கூட்டாக சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"சேது சமுத்திரத் திட்டத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க கடமைப்பட்டுள்ள இன்றைய மத்திய அரசு இதில் ஊசலாட்டமான நிலைபாட்டை எடுத்திருப்பது கவலையும், அதிர்ச்சியும் தருவதாக அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்காக, அனைத்து மட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டதோடு, இதற்கான ஒப்புதலையும் கடந்தகால பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வழங்கியிருந்தது. திட்டப்பணிகளும் அப்போதே தொடங்கப் பெற்றன.

இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கி, அமலாக்கத்தைத் துரிதப்படுத்த முற்பட்டது.

ஆனால், குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளும் ராமர் பாலம் என்ற பிரச்னையை எழுப்பி, சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கி வைக்கும் முயற்சியில் இறங்கின. இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதில் சேது சமுத்திரத் திட்டத்துக்கான அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில், பிரச்னையாக ஆக்கப்பட்டுள்ள மணல் திட்டை சேதப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.

இந்த நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைத் திரும்பப் பெற்றது. இடைக்காலத் தடை நீடிப்பதற்கு வழிவகுத்தது. இந்தத் திட்டப்பாதை குறித்து மறுஆய்வு மேற்கொள்வதாக உத்தரவாதம் அளித்து, அதற்கு கால அவகாசம் கோரியது.

இந்த பிரச்னைக்காக தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பந்த் போராட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரச்னையாக முன்னிறுத்திய அதிமுக இப்போது, இந்துத்துவா வகுப்புவாத சக்திகளை பகிரங்கமாக ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் அண்மைக்காலமாக தெரிவித்து வரும் கருத்துகள், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

எனவே, இத்தகைய ஊசலாட்டங்களைக் களைந்து, சேது சமுத்திரத் திட்டத்தை உறுதியாகவும், துரிதமாகவும் நிறைவேற்றி முடிக்குமாறு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தமிழக பிரிவு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி முடிக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் இயக்கத்தை நடத்த இரு கட்சிகளும் முடிவெடுத்துள்ளன. இதன் முன்னோடியாக, தென் மாவட்ட மக்களைத் திரட்டி தூத்துக்குடியில் பிப்ரவரி 23-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்'' என இரு தலைவர்களும் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்