இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்திலிருந்து மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற 3 மீனவர்களுள் ஒருவரான தங்கபாண்டியன் என்பவர் சிறிலங்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி விட்டார் என்ற செய்தியறிந்து முதலமைச்சர் கருணாநிதி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.
தங்கபாண்டியன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்திற்கு நிதியுதவியாக 1 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கக் கடற்படையினரின் இது போன்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு பெரிதும் கண்டிக்கத்தக்கது என்பதால், இதனை சிறிலங்க அரசின் கவனத்திற்கு மத்திய அரசின் மூலம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.