நீதிமன்றங்களில் புதிதாக 7,000 நீதிபதிகள் நியமனம்: வேங்கடபதி தகவல்!
சனி, 9 பிப்ரவரி 2008 (13:38 IST)
''இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் புதிதாக 7,000 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்'' என மத்திய சட்டம் மற்றும் நீதிதுறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார்.
பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்க முகாம் நிறைவு விழா கொல்லிமலை செம்மேட்டில் நடந்தது. ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் வேங்கடபதி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுடன் அனைத்து நீதிமன்றங்களையும் கணினி மூலம் இணைக்க மத்திய அரசு ரூ.410 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழங்குகள் விரைவில் முடிக்க 7,000 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு நீதி வழங்க நடமாடும் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.