ரூ.16 ஆயிரம் கோடியில் 5 புதிய தொழிற்சாலைகளு‌க்கு அனும‌தி!

சனி, 9 பிப்ரவரி 2008 (10:41 IST)
கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சென்னையில் ரூ.16 ஆயிரம் கோடியில் 5 புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று நட‌ந்த அமை‌ச்சரை கூ‌ட்ட‌த்‌தி‌ல் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்பட அமைச்சர்களும், தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்ட அரசு செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இ‌ந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் 5 மிகப் பெரிய திட்டங்கள் அமைப்பதற்கான செயற்குறிப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த 5 திட்டங்களும் ஒரு சேர சுமார் 16,000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டு வருவதுடன் சுமார் 58,500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பையும், சுமார் 47,500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.

அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டும் ஒப்புத‌ல் அளிக்கப்பட்டுள்ள 5 திட்டங்களுக்குமான முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும் இந்த அளவுக்கு ஒரே கூட்டத்தில் இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் இதுவே முதல் முறையாகும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்