பி‌ப். 10ஆ‌ம் தே‌தி 2-வது கட்டமாக போலியோ சொட்டு மருந்து!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (17:18 IST)
த‌மிழக‌மமுழுவது‌ம் ‌பி‌ப்ரவ‌ரி 10ஆ‌மதே‌‌தி 2வதக‌ட்டமாபோ‌லியேசொ‌ட்டமரு‌ந்தவழ‌ங்க‌ப்படு‌கிறது.

த‌மிழக‌மமுழுவது‌மகட‌ந்ஜனவ‌ரி 6 ஆ‌மதே‌தி முத‌ல்க‌ட்டமாக 5.37 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடு‌க்க‌ப்ப‌ட்டது. 2-வது கட்டமாக ‌போ‌லியோ சொ‌ட்டு மரு‌ந்து பி‌ப்ரவ‌ரி 10ஆ‌‌ம் தேதி கொடு‌க்க‌ப்படு‌கிறது.

சென்னை‌யி‌ல் 1,126 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அ‌ந்தத‌ந்த மைய‌‌ங்க‌ளி‌ல் வழ‌ங்க‌ப்படு‌கிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் நல வாழ்மையங்கள், பேரு‌ந்து நிலையம், இரயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களிலும், நடமாடும் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடு‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்த ப‌ணி‌யி‌ல் 4,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதே போ‌ல் த‌‌மிழக‌ம் முழுவது‌ம் உ‌ள்ள இர‌யி‌ல் ‌நிலைய‌ம், பேரு‌ந்து ‌நிலைய‌ம், ம‌க்க‌ள் நடமா‌ட்ட‌ம் உ‌ள்ள மு‌க்‌கிய இட‌ங்க‌ளி‌ல் சொ‌‌ட்டு மரு‌ந்து கொடு‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்