பெண் குழந்தைகளுக்கு த‌ற்கா‌ப்பு முறைகளை கற்பிக்க வேண்டும்: மகளிர் திட்ட அலுவல‌ர்!

புதன், 6 பிப்ரவரி 2008 (10:49 IST)
''சமுதாய சீரழிவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான முறைகளை பெண் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்'' என்று மகளிர் திட்ட அலுவலர் முத்துமீனாள் அறிவுறுத்தினார்.

இதகு‌றி‌த்து, கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி மைதானத்தில் நடைபெற்று வரும் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்க முகாமின் மூன்றாவது நா‌் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபேசுகை‌யி‌ல், "இந்த சமூகத்தில் மகளிர் பங்கு மிக முக்கியமானது. ஆண் பெண் பாகுபாடு தேவையற்றது. ஆண் குழந்தையை உயர்த்தியும் பெண் குழந்தைகளை அலட்சியம் செய்து அவர்களை ஒதுக்கி வைப்பதும் தவறானதாகும். பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறார்கள். எனவே பெண் குழந்தைகளை பாராட்டி உயர் கல்வி அளிப்பதுடன் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது நமது அனைவரின் கடமையாகும்" எ‌ன்றா‌ர்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமை ஏ‌ற்று‌பபே‌சினா‌ர். ‌பி‌ன்ன‌ர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 சுய உதவி குழுக்களுக்கு முத்து மீனாள் கடன் உதவிகளை வழங்கினார். 35-க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களில் உள்ள பெ‌ண்களு‌ம், வாழவந்தி நாடு பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் இந்த கருத்தொளி இயக்க முகாமில் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்