பி.எஸ்.என்.எல். தொலைபேசி உள்ளூர் அழைப்புக்கு ரூ.10 காசு: ராசா தகவல்!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:15 IST)
பி.எஸ்.என்.எல். தொலைபேசியில் உள்ளூர் அழைப்புகளுக்கு 10 காசும், இந்தியா முழுவதுமான அழைப்புகளுக்கு 20 காசும் கட்டண முறை விரைவில் அமுல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராசா கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் மேலை நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தொலை தொடர்பு மூலம் கிராம மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கப்படும் என்று கூறிய ராசா, நமது நாட்டில் தொலைபேசி வசதியை 7 விழுக்காட்டிலில் இருந்து அதிகப்படுத்தி உள்ளூர் அழைப்புகளுக்கு 10 காசு கட்டண முறையும், இந்தியா முழுவதுமான அழைப்புகளுக்கு 20 காசு கட்டண முறையும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் ஆண்டில் ஜெயங்கொண்டத்திற்கு ரூ.70 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அப்போது பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற செயல்பாடுகளில் தமிழ்நாட்டில் முதலிடத்தை பிடிக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.