நாட்டுப்புற கலைஞர்களுக்கு தனி நலவாரியம்: தமிழக அரசு
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:01 IST)
தமிழக அரச ு நாட்டுப்புற கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கிட நாட்டுப்புற கலைஞர்களுக்கான தனி நல வாரியத்தினை அமைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த ு, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 20.04.07 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி நாட்டுப்புறக் கலைஞர்களுக்கென் தனியே ஒரு நல வாரியம் அமைக்கப்படும் என்று பேரவை விதி 110ன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி, 'தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம்' அமைக்கப்பட்டது. வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு கீழ்க்காணும் நலத் திட்டங்கள் வழங்க வழிவகை செய்யயப்பட்டுள்ளது நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டு 18 வயது நிரம்பப் பெற்று 60 வயது நிரம்பாதவர்கள் உறுப்பினராகலாம். வாரியத்தின் உறுப்பினர் கட்டணம் ரூ.100. 60 வயது எய்தியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300 ஓய்வூதியமாகவும், மரணமடைந்த கலைஞர்களின் இறுதிச் சடங்கிற்காக ரூ.2000, அவரது வாரிசுதாரருக்கு ரூ.15,000 உதவித் தொகையாகவும் வழங்கப்படும். மேலும் பதிவு பெற்ற உறுப்பினர்களின் பிள்ளளைகள் 10ம் வகுப்பு முதல் தொழிற் பட்ட மேல் படிப்பு வரை பயில ரூ.1000 முதல் ரூ. 6,000 வரை நிதி உதவியும், உறுப்பினர்களின் இரு வாரிசுகளுக்கு திருமண உதவித்தொகையாக தலா ரூ.2000மும் பெண் உறுப்பினர்களின் மகப்பேறு உதவித்தொகையாக ரூ.3000 முதல் ரூ.6000 வரையிலும், கண் கண்ணாடி வாங்க ரூ.500ம் உதவித்தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செயலியில் பார்க்க x