சேது ‌தி‌‌ட்ட‌ம் விரைந்து முடிக்க தனித்தீர்மானம்: க‌ி. ‌வீரம‌ணி வ‌லியுறு‌த்த‌ல்

வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (11:39 IST)
சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து, அவ‌ரவெளியிட்டுள்ள அறிக்கையில், சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக் கொண்டே போவது, அதை கிடப்பில் போட்டு மதவாத சக்திகளின் செல்வாக்கை ஓங்க செய்யும் முயற்சியே ஆகும்.

குஜராத், இமாசல பிரதேச தேர்தல் முடிவுகளுக்கும், தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகளுக்கும் காங்கிரஸ் கட்சி முடிச்சு போட்டுப்பார்க்க‌க் கூடாது. மத சார்பற்ற முற்போக்கு சக்திகளை முறையாக ஒருங்கிணைத்து 2004-ல் தமிழ்நாட்டில் கருணாநிதி வகுத்த வியூகம் போல் வகுக்காததுதான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம்.

அதற்கும் ராமர்-சேதுவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தேர்தல் வேட்பாளர்கள் தேர்விலும் குளறுபடிகள். இப்படி உண்மைக்காரணங்கள் பல இருக்க, இந்த மாயையில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டு, இந்த வரலாற்று பெருமையையும் தமிழ்நாட்டிற்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் வலிமை சேர்க்கக்கூடிய சேதுக்கால்வாய் திட்டத்தை தாமதப்படுத்தலாமா?

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருப்பதும், இடதுசாரிகளின் இடையறாத வற்புறுத்தலும் வரவேற்கப்பட வேண்டியவை. தமிழ்நாடு சட்டமன்றத்தில்-நாளையே ஒரு தனித்தீர்மானத்தை கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வினை வற்புறுத்துவது பற்றி உடனடியாக முதலமைச்சர் கருணாநிதி ஆவன செய்ய வேண்டும் எ‌ன்று கி.வீரமணி கூறியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்