சென்னை தி.நகரில் உள்ள ஜெயச்சந்திரன் ஜவுளிக்கடை, நகைக்கடை, பாத்திரக் கடைகளில் இன்று வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உள்ளது. இங்கு அவர்களுக்கு சொந்தமான நகைக் கடை, பாத்திரக் கடைகளும் உள்ளன.
இந்த நிறுவனங்களில் இன்று வருமான வரி அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று சோதனை நடத்தினர். இதுதவிர மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயச்சந்திரன் குழும உரிமையாளர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கியதாக தெரிகிறது.