‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு மத்திய அரசு உதவ கூடாது: இந்திய கம்யூனிஸ்‌‌ட்!

வியாழன், 24 ஜனவரி 2008 (17:02 IST)
த‌மிழ‌ர்க‌ள் ‌மீது போ‌ர் தொடு‌த்து வரு‌ம் ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்து‌க்கு ம‌த்‌திய அரசு ‌நி‌தி உத‌வி செ‌ய்ய‌‌க் கூடாது எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளது.

சட்ட‌ப் பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கம்யூனிஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம் பேசுகை‌யி‌ல், ‌சி‌றில‌ங்கா‌வில் நடக்கும் போர் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடக்கும் சண்டையாகத் தெரியவில்லை. அங்குள்ள தமிழ் மக்கள் மீது ‌சி‌றில‌ங்கா அரசு போர் தொடுத்துள்ளது.

சி‌றில‌ங்கா ராணுவ‌த்து‌க்கு ம‌த்‌திய அரசு நிதி உதவிகளை செய்யக்கூடாது. இதை சொல்வதால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறக் கூடாது. அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். சிங்கள மக்களுக்கு கிடைக்கும் உரிமை தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

கா‌ங்‌கிர‌‌ஸ் உறு‌ப்‌பின‌ர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகை‌யி‌ல், அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்க ‌சி‌றில‌ங்காவுக்கு ஆயுதங்களை கொடுப்பது போல் ஒரு கருத்தை சிவபுண்ணியம் சொல்வது தவறான கரு‌த்தாகும். அமைதியான சூழல் ஏற்பட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தமிழர்களின் உணர்வு கருதி நமது பிரதமரே ‌சி‌றில‌ங்காவுக்கு செல்லவில்லை எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்