ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாக்க தனி சட்டம்! அரசு பரிசீலனை!
வியாழன், 24 ஜனவரி 2008 (16:51 IST)
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறினார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மைதீன்கான் பதில் அளிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, அதனை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு செய்து இதனை நடத்துவதற்கு அனுமதியை தமிழக அரசு பெற்றுத் தந்தது.
ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் வருங்காலத்தில் தடையின்றி நடைபெறுவதற்கு தனிச் சட்டம் கொண்டு வருவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதுபற்றி தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மைதீன்கான் கூறினார்.