சட்ட‌ப்பேரவை 6 நாள் நடக்கும் : சபாநாயக‌ர்!

புதன், 23 ஜனவரி 2008 (16:49 IST)
த‌மிழக ச‌ட்ட‌ப் பேரவை 6 நா‌‌‌ட்கள‌் நடைபெறு‌ம் எ‌ன்று சபாநாயக‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.

தமிழக சட்ட‌ப் பேரவை‌‌‌யி‌ல் ஆளுன‌ர் உரை முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் செ‌ய்த‌ியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், இ‌ன்று நட‌ந்த சட்ட‌ப் பேரவை அலுவல் ஆய்வுக்கூட்ட‌த்‌தி‌ல் முதலமைச்சர் கருணா‌நி‌தி, அவை முனைவர் அன்பழகன், அமைச்சர்க‌ள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதிஇளவழுதி, பேரவை துணைத்தலைவர் துரைசாமி, அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி ஆ‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

ம‌ற்று‌ம் அ.இ.அ.தி.மு.க. செங்கோட்டையன், ஜெயக்குமார், காங்கிரஸ் சுதர்சனம், பா.ம.க. ஜி.கே. மணி, மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்‌ட் சிவபுண்ணியம், விடுதலைச்சிறுத்தைகள் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். ம.தி.மு.க., விஜய காந்த் ஆகிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அலுவல் ஆய்வுக் கூட்ட முடிவுப்படி சட்ட‌ப் பேரவை கூட்டத் தொடர் 6 நாட்கள் நடைபெறும். நாளை (24ஆ‌‌ம் தே‌தி) மறைந்த உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஆளுன‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்குத் தீர்மானம் முன்மொழியப்படும். பிறகு அதன் மீது விவாதம் துவ‌ங்கு‌ம். 25, 26, 27 ஆகிய 3 நாட்களும் விடுமுறை.

28ஆ‌ம் தேதி ஆளுன‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் துவங்கும். 31ஆ‌ம் தேதி வரை இந்த விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி விவாதங்களுக்கு பதில் அளித்து பேசுவார். சட்ட‌ப் பேரவை நடக்கும் நாட்களில் 1ஆ‌ம் தேதி தவிர மற்ற நாட்களில் கேள்வி நேரமும் இடம் பெறும் எ‌ன்று சபாநாயக‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்